கொரோனா வெறும் ட்ரைலர் தான்; மெயின் பிக்சர் அமேசான் காடுகளில் இருந்து ரிலீஸ் ஆகிறதாம்..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா வெறும் ட்ரைலர் தான்; மெயின் பிக்சர் அமேசான் காடுகளில் இருந்து ரிலீஸ் ஆகிறதாம்..!!

 கொரோனா வெறும் ட்ரைலர் தான்; மெயின் பிக்சர் அமேசான் காடுகளில் இருந்து ரிலீஸ் ஆகிறதாம்..!!

கொரோனா தொற்றுநோய் தன்னுடைய கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை. கொரோனா உலகெங்கிலும் பரவி வரும் நிலையில், இப்போது அதை விட இன்னும் ஆபத்தான தொற்றுநோயின் ஆபத்து உலகிற்கு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் பீதியை கிளப்பியுள்ளனர். அமேசானின் காடுகளில் காணப்படும் ஒரு வைரஸ், உலகெங்கிலும் பெரும் தொற்றாக பரவும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பிரேசிலின், அமேசானாஸ் பெடரல் பல்கலைக்கழகத்தின் (Federal University of Amazonas) உயிரியலாளர் மார்செல்லோ கோர்டோ மற்றும் அவரது குழுவினர் மூன்று பைட் டாமரின் குரங்குகளின் (pied tamarin monkey) அழுகிய சடலத்தை மீட்டனர். இது ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இங்கே உயிரியலாளர் குரங்குகளின் மாதிரியிலிருந்து ஒட்டுண்ணி புழுக்கள், வைரஸ்கள் மற்றும் பிற தொற்றுகள் கண்டுபிடித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

 அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கா-உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!! |

யோடா முகம் கொண்ட பைட் டாமரின் குரங்கிலிருந்து தொற்று பரவும் ஆபத்து அதிகம் பரவும் ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த குரங்கு பிரேசில் முழுவதும் காணப்படுகிறது. இந்த வைரஸ் அதே இனத்தைச் சேர்ந்த குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது மிகவும் தொற்றுநோயாகும். இந்த வைரஸ் கொரோனா தொற்றுநோயை விட இன்னும் ஆபத்தானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த வைரஸின் பெயர் மாயாரோ வைரஸ். இந்த வைரஸ் இப்போது தென் அமெரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதன் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது. மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால், ஒரு நபர் நோய்த்தொற்று ஏற்பட்டால், அது மாயாரோ வைரஸ் என்பதைக் கண்டு மருத்துவர்கள் செய்யும் ஆய்வில், தொற்று உள்ள நபருக்கு வைரஸ் இருப்பதை கண்டறிவதும் கடினமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

இந்த செய்தியையும் படிங்க…

‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’- உலக சுகாதார நிறுவனம்..!! 

பிரேசிலின் மனாஸைச் சுற்றி, பல நூறு கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள அமேசான் காடுகள் உள்ளன. மனாஸில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். உலகளவில் 1400 வகையான வெளவால்களில், 12 சதவீதம் பேர் அமேசான் காட்டில் மட்டுமே வாழ்கின்றனர். இது தவிர, குரங்குகள் மற்றும் எலிகள் போன்ற பல இனங்கள் உள்ளன. அவை வைரஸ்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகள் ஆகியவற்றில் வாழ்கின்றன. இவை எந்த நேரத்திலும் மனிதர்களுக்கு ஒரு பெரிய தொற்றுநோயின் ஆபத்தை உருவாக்கலாம். கொரோனா வைரஸ் பரவலின் இரண்டு அலைகளால் பாதிக்கப்பட்ட மனாஸில், இதுவரை 9000 பேர் இறந்துள்ளனர்.

Leave a Comment