கொரோனா பாதிப்புக்கு மேலும் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள், வல்லுநர்கள் எச்சரிக்கை !! - Tamil Crowd (Health Care)

கொரோனா பாதிப்புக்கு மேலும் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள், வல்லுநர்கள் எச்சரிக்கை !!

கொரோனா பாதிப்புக்கு மேலும் புதிய அறிகுறிகள்.. மருத்துவர்கள், வல்லுநர்கள் எச்சரிக்கை !!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி 2 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. ஆனாலும் இந்த வைரஸ் இன்னும் மறைந்தபாடில்லை. அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வருவதால் மருத்துவத்துறையினர் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது கொரோனாவாக இருக்கலாம் என்று எச்சரிக்கை எழுந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கை, அறிகுறிகள் என்ன..?? 

கொரோனாவின் பிரதான அறிகுறிகளான 

காய்ச்சல், 

சளி, 

இருமல், 

தொண்டைக்கட்டு, 

மூச்சுத் திணறல் 

இல்லாவிட்டாலும், 

காது கேளாமை, 

பயங்கரத் தலைவலி,

 நாக்கு வறளுதல்

 போன்றவை இருந்தால் உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு கோவிட் பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்குழுவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாவது, 

காது கேளாமை, 

இமைப்படல அழற்சி, 

கண் எரிச்சல், 

கடுமையான களைப்பு, 

நாக்கு வறட்சி, 

எச்சில் ஊறுவதில் குறைவு, 

நீண்ட நேர தலைவலி, 

சருமக்கோளாறுகள்

 உள்ளிட்டவையும் கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம்.

கொரோனா 2ஆவது அலையின் போது டெல்டா உருமாற்றத்தினால் நிறைய பேருக்கு உணவு குடல் பாதையில் அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதனால் 

வயிற்றுப்போக்கு, 

குமட்டல், 

வாந்தி, 

போன்ற அறிகுறிகள் தோன்றியதைக் குறிப்பிட்டார். அதே போல் காய்ச்சல் வருவதும் போவதுமாக இருந்ததையும் தீவிர காய்ச்சல் ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment