கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க நடவடிக்கை- அரசு தகவல்..!! - Tamil Crowd (Health Care)

கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க நடவடிக்கை- அரசு தகவல்..!!

 கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க நடவடிக்கை- அரசு தகவல்..!!

தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி வீணாவதை, 3 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு, கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதும், 305.04 கோடி ரூபாய் செலவில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள், இரண்டு மடங்குக்கு மேல் உருவாக்கப்பட்டன.தற்போது, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உள்ள, 54 ஆயிரத்து, 417 படுக்கைகளில், 32 ஆயிரத்து, 942 படுக்கைகள், ஆக்சிஜன் வசதி உள்ளவை. 

இந்த செய்தியையும் படிங்க…

10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு -சென்னையில் வேலை..!! 

இது தவிர, 6,879 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் கவனிப்பு மையங்களில், 38 ஆயிரத்து, 426 படுக்கைகள், தயார் நிலையில் உள்ளன. 6,517 வென்டிலேட்டர்களும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை மேலும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையில், ஆக்சிஜனை பொறுத்தவரை, கடந்த ஆண்டு சேமிப்பு கிடங்கு வசதி, 395 டன்னில் இருந்து, 888 டன்னாக உயர்த்தப்பட்டது. 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 1,167 டன் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு வசதி உள்ளது.தமிழகத்தில், தினசரி, 240 டன் ஆக்சிஜன் தேவைப்படும் சூழலில், வருங்காலங்களில் இதன் தேவை அதிகரிக்கலாம் என்பதால், இதற்கு தனியே ஒரு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் உயர் ரக மருந்துகளான, டோசிலிசுமாப், ரெம்டெசிவர், எனாக்சிபிரின் போன்ற மருந்துகள், தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டு, தாலுகா மருத்துவமனை வரை வினியோகிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.மாவட்டங்களில் உள்ள, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. அடுத்த, 20 நாட்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இருப்பு உள்ளது.

மேலும், இரண்டு லட்சம் குப்பிகள் கொள்முதல் செய்ய, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 4,497 தடுப்பூசி மையங்களில், கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு நாளும், மாலை நேரத்தில், ஐந்து அல்லது ஆறு பேர் மட்டும் வந்த நிலையில், அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், மீதம் ஐந்து பேருக்கு பயன்படுத்தக் கூடிய மருந்து வீணாகும் நிலை ஏற்பட்டது.ஒரு குப்பி மருந்தை திறந்தால், அதை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

இந்த செய்தியையும் படிங்க…

இன்று முழு ஊரடங்கு: என்னென்ன இயங்கும்..?? என்னென்ன இயங்காது..?? 

அதன்பிறகு பயன்படுத்தினால், வீரியத்தன்மை குறைய வாய்ப்புள்ளது; அதை பயன்படுத்த இயலாது.தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 10 சதவீதம் வரை மருந்து வீணாவது அனுமதிக்கப்படுகிறது. ஏப்., 1 முதல், 20 வரை, தடுப்பூசி வீணாவது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை, 3 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மே, 1 முதல், 18 வயது முடிந்த அனைவருக்கும், தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே, தடுப்பூசி மருந்து வீணாவது முற்றிலுமாக தவிர்க்கப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment