கொரோனா தடுப்பூசிகளினால் உருவாகும்- நோய் எதிர்ப்பு சக்தி பாதியாக குறைந்து விடுமா..?? - Tamil Crowd (Health Care)

கொரோனா தடுப்பூசிகளினால் உருவாகும்- நோய் எதிர்ப்பு சக்தி பாதியாக குறைந்து விடுமா..??

கொரோனா தடுப்பூசிகளினால் உருவாகும்- நோய் எதிர்ப்பு

 சக்தி பாதியாக குறைந்து விடுமா..?? 

கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளினால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்வரும் 10 வாரங்களுக்குப் பிறகு சரிபாதியாக குறைந்துவிடுகிறது என்று இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் அஸ்ராஜெனேகா போன்ற தடுப்பூசி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.

அதாவது இந்த தடுப்பூசிகளின் மூலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வை இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளார்கள். அந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசியால் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்ப கட்டத்தில் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளார்கள்.

மேலும் இவ்வாறு உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பத்தில் அதிகமாக இருந்தாலும்கூட எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் அதாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 வாரங்களுக்குப் பிறகு இதனுடைய எதிர்ப்பு சக்தி பாதியாக குறைந்து விடுகிறது என்னும் அதிர்ச்சிகர உன்மை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Leave a Comment