குழந்தையின்மை பிரச்சனை:எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!!

குழந்தையின்மை பிரச்சனை:எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!!

இன்றைய சூழலில் பலருக்கும், வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தையின்மை பிரச்சனை நிலவுகிறது. இந்த குழந்தையின்மை பிரச்சனை 6ல் 1-வருக்கு என்ற அடிப்படையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குழந்தையின்மை (அ) குழந்தை வரம் தள்ளிப்போகும் தம்பதிகளில், 40 சதவிகிதம் ஆண்களால் தான் இந்தப் பிரச்சனை வருவதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. விந்து நீரில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் உயிர்ப்புத்தன்மை ஆகியவையே ‘ஆண்மை’-க்கு மிகவும் முக்கியமானது.

 இந்தச் செய்தியையும் படிங்க…

நரம்பு மண்டல செல்களை பாதிக்கும் Cancer Virus: ஆய்வில் தகவல்..!!  

பொதுவாக, இன்றைய தலைமுறை இளைஞர்களின் வாழ்க்கை என்பது மனிதத் தொடர்புகளைத் தாண்டி, மெஷின்களுக்குள்ளாகவே புதைந்து கிடைக்கிறது. நேரம் காலம் பார்க்காமல் கம்யூட்டரின் முன்னால் அதிக நேரம் செலவிடுகிற ஆண்களும், ஜங் ஃபுட்ஸ், பாஸ்ட் ஃபுட்ஸ் என கிடைக்கிற எதையாவது சாப்பிட்டுவிட்டு, தங்களுடைய வாழ்க்கை முறையையே மாற்றி விட்டதால் நிறைய நிறைய ஆரோக்கியக் குறைபாடுகள், ஹார்மோன் சமநிலை இன்மை ஆகிய பிரச்சினைகள் உண்டாகின்றன. இதுபோன்ற ஹார்மோன் குறைபாட்டு பிரச்சினையாலும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களும் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்றான ஆண்மைக்குறைபாடு இருக்கிறது. அதனால் நம் ஊரில் ஃபெர்டிலிட்டி சென்டரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.

பாதாம்:

பாதாம் பருப்புகளில் பைபர்,மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. தொடர்ந்து பாதம் எடுத்துக்கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஒவ்வொரு விந்தணுவின் தரத்தினையும் இது அதிகரிக்கிறது .

முட்டை:

விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்து நீர்த்துப்போகாமல் இருக்கவும் முட்டை பெரும் உதவியாக உள்ளது. முட்டையில் உள்ள புரோடீன் மற்றும் வைட்டமின் E சத்துக்கள், விந்தணுக்களை  அதிகரிக்க விடாமல் தடுக்கும் தன்மையை நீக்குகிறது. ஆகவே, விந்தணு பாதிக்கப்படாமல் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் சுரக்கும். இது குழந்தை உருவாவதற்கு வழிவகை செய்யும்.

மாதுளை:

மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிலுள்ள அணுக்களையும் தூண்டிவிடுகிறது. இந்த சத்துக்கள் இல்லாவிட்டால், உடலின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, விந்தணுவின் குவாலிட்டியும் குறைந்துவிடும். மாதுளையில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீரைகள்:

கீரைகளில் வைட்டமின் பி9 சத்துக்கள் எனப்படும் ஃபோலிக் ஆசிட் உள்ளது. இது ஆண்மையை இயற்கை முறையில் அதிகரிக்க வழிவகை செய்கிறது. தொடர்ந்து நல்ல கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால், ஆண்களால் குழந்தை பிறக்காமல் போகும் பிரச்சனையே இல்லாமல் செய்துவிடும். 

முருங்கை கீரை:

முருங்கை கீரை, பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நாவின் சுவையின்மை பிரச்சனை தீரும். முருங்கை பூவை அரைத்து பால் மற்றும் பனங்கற்கண்டுடன் சேர்த்து அருந்தலாம். முருங்கை கீரையை அல்லது பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். 

வெள்ளரி விதை:

அதிக அளவிலான ஃபோலிக் ஆசிட் கொண்ட இயற்கை உணவுகளில் ஒன்று வெள்ளரி விதை. ஆண்கள் தங்கள் உணவுகளில் ஃபோலிக் ஆசிட் குறைவாக இருந்தால், அவை விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். வெள்ளரியில் நிறையய அற்புத மருத்துவ குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் சில முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். சிறுநீரகக் கற்கள், நீர்க்கடுப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது தான் இந்த வெள்ளரி விதை. இதை சாலட் போன்ற உணவுகளின் மீது தூவி சாப்பிட முடியும்.

மேலும் புரோக்கோலி, வால்நட்ஸ், பூண்டு, தக்காளி, வாழைப்பழம், டார்க் சாக்லேட் மற்றும் சில உணவுகளும் சாப்பிட்டு வரலாம். 

Leave a Comment