குடைமிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

 குடைமிளகாயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!

குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

குடை மிளகாயின் சுவை, கிராமத்து மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக, குடை மிளகாய் தென்மாநில சமையல்களில் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால் சைனீஸ் வகை உணவுகளில் அதிகம் பயன்படுகிறது.

குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவை குணமாக பயன்படுகிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்புண் தோன்றும். அந்நோய்களை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது. குடைமிளகாயில், ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை, குறைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் எனும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளை குறைக்கும்.

Leave a Comment