குடும்ப அட்டையில் புதிதாக குடும்ப உறுப்பினரை சேர்க்க எளிய வழிமுறைகள்..!! - Tamil Crowd (Health Care)

குடும்ப அட்டையில் புதிதாக குடும்ப உறுப்பினரை சேர்க்க எளிய வழிமுறைகள்..!!

குடும்ப அட்டையில் புதிதாக குடும்ப உறுப்பினரை சேர்க்க


 எளிய வழிமுறைகள்..!!

குடும்ப அட்டையில் ஒருவரது பெயரை புதிதாக சேர்க்கவும், ஏற்கனவே இருக்கும் பெயரை  நீக்கவும்  ஆன்லைன் மூலமாக செய்ய எளிய வழிகள் உள்ளன. அவை பின்வருமாறு:

குடும்ப அட்டையில் புதிதாக யார் யாரை குடும்ப உறுப்பினரைச் சேர்க்கலாம்:

  • புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்கள் மனைவி பெயரை, குழந்தைகளின் பெயரையும் தங்கள் குடும்ப அட்டையுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • மேலும் வேறு ஏதேனும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் விடுபட்டு இருந்தால் அவர்கள் பெயரையும் தங்கள் குடும்ப அட்டையுடன் சேர்த்து கொள்ளலாம்.
  • அதற்கு உங்கள் மொபைல் எண் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • புதிதாக சேர்க்கப்படும் நபரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்க கூடாது.
  • அவ்வாறு இருந்தால் அவருடைய பெயரை பழைய குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்து அதன்பின் இணைத்துக் கொள்ளலாம்.

உங்கள் குடும்ப அட்டையில் (SMART CARD) மாற்றங்களைச் செய்வதற்கான வழிமுறைகள்:

TNPDS ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://tnpds.gov.in/  செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தின் வலது புறத்தில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற தலைப்பின் கீழ்

உறுப்பினரை சேர்க்க 

முகவரி மாற்றம் செய்ய

குடும்ப தலைவர் மாற்றம் செய்ய

குடும்ப உறுப்பினரை நீக்க

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

போன்ற சேவைப் பட்டியல்கள் இருக்கும்.

அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஒரு புதிய பக்கம் திறக்கும்.  அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தங்கள் 10 இலக்க கைபேசி எண்  மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு பதிவுசெய் என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

அந்த OTP யை உள்ளிட்டு பதிவுசெய் என்பதை கிளிக் செய்யவும்.

பதிவு செய்த உடன் அட்டை தொடர்பான சேவைக்கு என்ற தலைப்பில் ஒரு படிவம் திரையில் தோன்றும். அதில் 

கடையின் பெயர், 

குடும்ப அட்டையின் எண், 

உங்கள் பெயர், 

குடும்ப உறுப்பினர்கள் பெயர், 

வயது, 

பாலினம்

போன்ற விபரங்கள் இருக்கும்.

இப்போது திரையில் காண்பிக்கும் படிவத்தில்,

யார் பெயரை சேர்க்க வேண்டுமோ அவரது பெயரை தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளிடவும்.

பின்னர் அவரது 

பாலினம்,

பிறந்த தேதி,

உறவுமுறை

 ஆதார் எண்

முதலியவற்றை அந்தந்த கட்டங்களில் சரியாக நிரப்பவும்.

ஆவணங்கள் என்ற இடத்தில் ஆதார் அட்டை என்பதை தேர்ந்தெடுக்கவும்.

Choose File  என்பதை கிளிக் செய்து ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்யவும்.

இப்பொழுது உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்யவும்.

கீழே உள்ள கட்டத்தில் அவரது விபரங்கள் தெரியும்.

அந்த விபரங்களை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருந்தால் உறுதிபடுத்துதல் என்பதை கிளிக் செய்து இறுதியாக பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யவும்.  

இப்பொழுது உங்கள் கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

உங்களது மொபைலுக்கு ஒரு குறிப்பு எண் தரப்படும். அதை பத்திரமாக குறித்து வைத்து கொள்ளவும்.

உங்கள் அட்டை தொடர்பான சேவை நிலையை அறிந்து கொள்ள இந்த எண் அவசியம்.

அட்டை தொடர்பான சேவை நிலையை அறிந்து கொள்ள:

TNPDS முகப்பு பக்கத்தின்  https://tnpds.gov.in/  வலது புறத்தில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற தலைப்பின் கீழ் அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து, புதிய பக்கம் திறக்கும். 

அதில் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறிப்பு எண்ணை(OTP) உள்ளிடவும்.

இப்பொழுது உங்கள் அட்டையின் கோரிக்கை நிலவரம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்

Leave a Comment