காவல்துறையினருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கும் ஊக்கத் தொகை திட்டம்-முதலமைச்சர் ..!!
காவலர்களுக்கு தலா 5000 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியும் படிங்க…
Post office savings schemes:கணக்கு துவங்குவது மிக எளிமையானது..!!
அவர்களது தன்னலமற்ற பணியினை ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு, ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 58 கோடியே 59 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், காவல்துறையைச் சார்ந்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலான 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறை பணியாளர்கள், தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை பெறுவார்கள்.