கால்நடை மருத்துவ படிப்புக்கு Sep. 8முதல் விண்ணப்பிக்கலாம்..!!
கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பட்டப் படிப்புகளில் 2021-22ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. அதில், பிவிஎஸ்சி, ஏஎச், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் பிடெக், கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகிய இளநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் அக்டோபர் 8ம் தேதி வரை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் Sep.8 தொடங்கி அக்டோபர் 8ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக இணைய தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.