காலக்கெடு நீட்டிப்பு: PM-Kisan திட்டம்..!!

 காலக்கெடு நீட்டிப்பு: PM-Kisan திட்டம்..!!

அதிகாரப்பூர்வ வெப்சைட்:  pmkisan.gov.in

PM KISAN திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க உள்ள எதிர்கால தவணைகளை உறுதி செய்ய ஒரு முக்கியமான செயல்முறையை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கட்டாய eKYC காலக்கெடுவை மத்திய அரசு தற்போது நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விவசாயிகள் கட்டாய eKYC செயல்முறையை இப்போது மே 22, 2022-க்குள் முடிக்கலாம். இந்த அறிவிப்பின் மூலம் தற்போதைய காலக்கெடுவாக இருந்த மார்ச் 31-ஆம் தேதி என்பது மே 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

அனைத்து பிஎம் கிசான் விவசாய பயனாளிகளுக்கான eKYC காலக்கெடு 22 மே 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக PM KISAN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நலிவடைந்த விவசாயிகளுக்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் நிதியாண்டில் 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

PM-KISAN திட்டத்தின் கீழ் e-KYC செயல்முறையை முடிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ..!!

* PM-Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று login செய்ய வேண்டும்

* ஹோம்பேஜில் தோன்றும் ‘e-KYC’ ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்

*  ஆதார் ekyc-ஐ எளிதாக்கும் ஒரு புதிய பேஜ் ஓபன் ஆகும். அதில் ஆதார் கார்டு நம்பர், கேப்ட்சா கோட் ஆகியவற்றை என்டர் செய்து search-ஐ கிளிக் செய்ய வேண்டும்

* ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை எண்டர் செய்யுமாறு கேட்கப்படும்

* மொபைல் நம்பரை எண்டர் செய்த பிறகு, ‘Get OTP’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்

* பின் குறிப்பிட்ட பாக்ஸில் மொபைல் நம்பருக்கு வந்துள்ள OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்

இறுதியாக PM-Kisan e-KYC வெற்றிகரமாக Submit ஆனதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

Leave a Comment