கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா.? -சுகாதார அமைச்சகம் பதில்..!!
கேள்வி:இனி கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா?
பதில்:கர்ப்பிணி பெண்களும் இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களைச் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்கு வயது வரையறை உள்ளதா ? இளவயதினர் ,குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் மக்களிடையே தோன்ற இதற்கான பதில்களை அரசு தரப்பில் மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா? தாய் சேய் இருவருக்கும் பாதிப்பு நேரிடுமா? போன்ற கேள்விகளுக்கு தற்போது சுகாதார அமைச்சகம் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில்,
பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களின் உடல் நிலை பாதிப்பதோடு மட்டுமில்லாமல் அதனால் சிசுவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக கர்ப்பிண்ப் பெண்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பானது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் தாய்க்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். அதிலும் நோய் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பது, குறைந்த எடையில் குழந்தை பிறப்பது மற்றும் அறிய நிகழ்வாக கொரோனா முற்றிய நிலையில் குழந்தை பிறப்பதற்கு முன் இறப்பதும் உண்டு.
இந்த செய்தியையும் படிங்க…
Delta Plus Virus – “கவலைப்பட வேண்டிய வைரஸ்”..?? எப்படித் தப்பிப்பது..??
கருவுற்றிருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தை பெற்றவுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் போதும்.
கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது மேலும் மற்ற மருந்துகளைப்போல் இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் லேசான காய்ச்சல் மற்றும் மருந்து செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம் போன்றவை இருக்கும்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டது குறித்து இதுவரை பதிவாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். லட்சத்தில் ஒருவருக்கு இது நடக்க நேர்ந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது அவசியம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்களில் 90 சதவிகிதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமலே வீட்டு தனிமையிலேயே தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.