கர்நாடகத்தில் 10th பொதுத்தேர்வு-கல்வித்துறை அமைச்சர்..!!

 கர்நாடகத்தில்  10th பொதுத்தேர்வு-கல்வித்துறை அமைச்சர்..!!

கர்நாடகத்தில் 10th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூலை 19 முதல் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க… 

NEET தேர்வுக்கு மாணவர்கள் கட்டாயம் தயாராக வேண்டும் ;அது தவறு இல்லை  – அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

கரோனா இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புக்கு நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தேர்வு நடத்துவது குறித்து உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் சுரேஷ் குமார், ஜூலை 19 முதல் 22 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் சுரேஷ் குமார் கூறியதாவது,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு நாள்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. ஜூலை 19 ஆம் தேதி முக்கிய பாடங்களுக்கும், ஜூலை 22ஆம் தேதி மொழிப்பாடங்களுக்கும் காலை 10.30 முதல் 1.30 வரை தேர்வு நடைபெறும்.

கரோனா காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு 48,000ஆக இருந்த தேர்வு அறைகள் 73,066ஆக மாற்றப்பட்டுள்ளது. ஒரு அறைக்கு 12 மாணவர்கள் வீதம் 8.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

தேர்வில் பணிபுரியவுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்விற்கு வரும் மாணவர்களின் உடல்நலனை கவனிக்க ஒவ்வொரு மையத்திலும், மருத்துவர் உள்பட சுகாதாரத்துறையினர் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க… 

ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்-உயர் கல்வித்துறை அமைச்சர் ..!! 

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள கரோனா முகாம்களுக்கு சென்று தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment