கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI)- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !! - Tamil Crowd (Health Care)

கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI)- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

 கருப்பு பூஞ்சை(BLOCK FUNGI)- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !!

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 12 பேர் கொண் சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர்.

பின்னர் சிறப்புக்குழு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது,

தமிழ்நாட்டில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம். கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது.

இந்த செய்தியையும் படிங்க…

B.Ed., M.Ed.,  பருவத்தேர்வுகள் – வரும் 28ம் தேதி துவக்கம்..!!

கரும்பூஞ்சை நோயை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்துத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால் உயிரிழப்பு குறைந்துள்ளது.

கருப்பு பூஞ்சை பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மிகவும் குறைவு ஆகும். கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனே சிகிச்சை மேற்கொண்டால் காப்பாற்றிவிடலாம் என கூறினார்.

கரும்பூஞ்சை பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் 6 வாரங்கள் வரை கவனிக்க வேண்டிய அம்சங்களாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

வழிகாட்டுதல்கள்:

  • வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், 
  • தூசி மிகுந்த இடங்களுக்குச் செல்லக்கூடாது, 
  • ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். 
  • சர்க்கரை அளவு 180க்கு மேல் இருப்பது, வாந்தி, வயிற்றுவலி, தொடர் தாகம், சிறுநீர் போவது அதிகரித்தல், குழப்பம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும்.
  • முகத்தின் ஒருபகுதியில் வீக்கம், 
  • மூக்கில் ஒரு துவாரத்தில் தொடர்ச்சியாக அடைப்பு, 
  • நெற்றியில் கடும்வலி,
  •  கண்சிவத்தல், 
  • இரட்டைப்பார்வை, 
  • வாய்ப்புண், 
  • பல் வலி அல்லது பல் வலுவிழத்தல்,
  •  கருப்பு அல்லது பழுப்பு நிற திரவம் மூக்கில் இருந்து வடிதல் 

இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்:

ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட் , லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். 

மருந்துகளை பயன்படுத்தலாம் :

ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல் , இஸவுகோனசோல் மருந்துகளை பயன்படுத்தலாம் என்று வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Leave a Comment