கணவன், மனைவி உறவு சிறப்பாக அமைய-சின்ன சின்ன விஷயங்கள் ..!!

கணவன், மனைவி உறவு சிறப்பாக அமைய-சின்ன சின்ன விஷயங்கள் ..!!

 கணவன், மனைவி உறவு என்பது கடைசி வரை நம்முடன் வாழ்வின் இன்ப, துன்பங்கள் அனைத்திலும் கூடவே வரக்கூடியது. இந்த உறவுக்கு மரியாதை கொடுத்து நடப்பதும், எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் முக்கியம். ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை மட்டும் புரிந்து கொண்டு நடந்தால், கணவன், மனைவி உறவு சிறப்பாக அமையும்.

இந்த செய்தியும் படிங்க…

 ஜலதோஷம், இருமலை நீக்க – மூலிகை டீ தயாரிப்பது எப்படி..??  

ஒருவர் மீது பயம் இருந்தால் தான், அவர் இதனை சொன்னால் என்ன சொல்ல போகிறாரோ என்று பயந்து பொய் சொல்வோம். அந்த அளவுக்கு பயத்தை தனது துணைக்கு தராமல் இருக்க வேண்டும்.

அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் கணவரா வரணும்னு உங்க மனைவி சொல்லவைக்கும் வழிகள்

மல்லிகையோ, ரோஜாவோ மலருக்கு மயங்காத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள் என அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனால் மனதைத் தொடும் பரிசு இது.

உன் பார்வையில் ஓராயிரம்:

கணவனோ, காதலனோ தன்னை மட்டுமே பார்க்கவேண்டும், கவனிக்கவேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பம். பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்து விடாதீர்கள். அருகில் அமர்ந்திருக்கும் தருணங்களில் வார்த்தைகள் பேசுவதை விட கண்களால் பேசுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.

மனம் கவரும் மாலை:

மழைக்காலத்தில் மாலை நேர தேநீர் எதிர் எதிரே அமர்ந்து டீ சாப்பிட்டுப் பாருங்களேன். அந்த ஒரு அற்புதத்தருணத்தில் உங்கள் துணையின் முகத்தில் புன்னகை பூக்கும்.

ஒரு நாள் சமைக்கலாமே?:

தினமும் மனைவி கையால் சாப்பிட்ட பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தனது கையால் சமைத்து மனைவிக்கு பரிமாறலாம். 

கவனிப்பு அவசியம்:

பரிசு கொடுப்பது: விலை உயர்ந்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று டின்னர் கொடுப்பது ஆகியவற்றைவிட உங்கள் மனைவியை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொள்கிறீர்கள் என்பதிலும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.

மனைவியின் நண்பர்கள்:

உங்களுடைய நண்பர்களுடன் பழகுவதைப் போல மனைவியின் நட்பு வட்டாரத்துடன் பழகிப்பாருங்களேன். நீங்கள்தான் மிகச்சிறந்த கணவராக இருப்பீர்கள்.

பாதுகாப்பா இருங்களேன்:

பெண்கள் எப்பவுமே ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வுதான். பொது இடத்திலோ தனிமையிலோ ஆறுதலாய் தோள் கொடுங்கள்.

சின்னதாய் ஒரு கவிதை:

அவ்வப்போது கவிதையாய் பேசுங்கள். சில சமயம் மெயில் செய்யுங்கள். சொந்தமாக வராவிட்டாலும் காப்பியடித்தாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லை. குறிப்பாக ஊடல் தருணங்களில் இந்த கவிதைத் தூது நல்ல பலன் கொடுக்குமாம்.

அடிக்கடி பேசுங்களேன்:

செல்போனில் அடிக்கடி பேசுங்கள். முடியாவிட்டால் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புங்கள். சில நிமிடங்கள் பார்க்காமல் விட்டாலோ, எங்காவது வெளியூர் செல்ல நேர்ந்தாலோ ஐ மிஸ் யூ மெசேஜ் அனுப்புங்கள். காதல் மொழிகளால் இன்பாக்ஸ் நிறையட்டும்.

இந்த செய்தியும் படிங்க…

“DO NOT SKIP YOUR BREAKFAST – காலை உணவை தவிர்க்காதீர்கள்”..!!  

கை பிடித்துச் செல்லுங்களேன்:

வெளியிடங்களுக்குச் செல்லும்போது உங்கள் மனைவியின், காதலியின் கையை பிடித்துச் செல்லுங்கள். அதுபோன்ற பாதுகாப்பு உணர்வைத்தான் அவர் விரும்புகிறார். காலையில் எழுந்த உடன் அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம் என கொடுங்களேன். செல்ல விளையாட்டும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

Leave a Comment