ஒரு வருகைக்கு ரூ.1,000/- சம்பளம்; பெண்களுக்கான அரசு வேலை-2021…!!

 ஒரு வருகைக்கு ரூ.1,000/- சம்பளம்; பெண்களுக்கான அரசு வேலை-2021…!!

அரசாணை எண்.நிலை.86 சமூக நலன் மற்றும் சத்துணவுதிட்டத்துறை, நாள் 25.11.2016ன் படி தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் (சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ) மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்கு ஆற்றுப்படுத்துனர்கள் மூலம் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற பெண்கள் மட்டும் அவர்களது விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் ஒளிநகலுடன் 10.09.2021 க்குள் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும்படி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துனர்களுக்கு வருகையின் அடிப்படையில் வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல் வாரம் ஒருமுறை மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 /-வழங்கப்படும்.

மேலும் விபரம் வேண்டுவோர் கோயம்புத்தூர் அரசினர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

நிறுவனம்: Coimbatore Social Defense Department

வேலையின் பெயர்: Counsellors பணி

காலிப்பணியிடங்கள்: 09

தேர்ந்தெடுக்கும் முறை: Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.09.2021

கல்வி தகுதி:அரசு/ UGC அனுமதி பெற்ற கல்லூரிகளில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி

சம்பளம்:ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை சம்பளம்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர், 

அரசினர் கூர்நோக்கு இல்லம், 

1094, அவிநாசி சாலை, 

பாப்பநாயக்கன் பாளையம், 

கோயம்பத்தூர் – 641 037. 

தொலைபேசி – 0422 2244546

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/08/2021082665.pdf

Leave a Comment