ஒரு சவரன் தங்கம் ரூ.216 குறைந்தது..!! - Tamil Crowd (Health Care)

ஒரு சவரன் தங்கம் ரூ.216 குறைந்தது..!!

 ஒரு சவரன் தங்கம் ரூ.216 குறைந்தது..!!

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. கடந்த 9-இல் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், 21-இல் ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

SBI Alert: கொரோனா பெயரில் கொள்ளை- பணம் செலுத்தும் முன் கவனமாக இருங்க!

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமையான(28.04.21) இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.216 குறைந்து, ரூ.35,504-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.27 குறைந்து, ரூ.4,438 ஆக உள்ளது.

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்றும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து ரூ.73,500 ஆகவும் உள்ளது.

Leave a Comment