ஊரடங்கு தளர்வா? இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை..!!

 ஊரடங்கு தளர்வா? இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை..!!

ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் இன்று (JUNE  19) மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில், CORONA  தொற்று பரவலை தடுக்க, MAY  மாதம் 24ம் தேதி FULL LOCKDOWN  அறிவிக்கப்பட்டது. இதனால், தொற்று பரவல் குறையத் துவங்கியது. 

இந்த செய்தியும் படிங்க…

“அரசுப்பள்ளிகளில்: ஆங்கில பயிற்சியை மேம்படுத்துங்கள்” – கமல்ஹாசன்..!!  

அதைத் தொடர்ந்து, தமிழக அரசு படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. JUNE  14ம் தேதி முதல் கடைகள் திறப்பு உட்பட சில தளர்வுகளுடன் கூடிய FULL LOCKDOWN  அறிவிக்கப்பட்டது. இந்த LOCKDOWN  21ம் தேதி காலை 6:00 மணிக்கு முடிய உள்ளது.தற்போது, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் CORONA தொற்று அதிகம் உள்ளதால், அந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

FULLLOCKDOWN  அறிவிக்கப்பட்ட போது, தினமும் CORONA  தொற்று பரவலால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. தற்போது தினசரி பாதிப்பு 9,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்வாதாரத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

இந்த செய்தியும் படிங்க…

கல்வித் தொலைக்காட்சியில் (2021-2022) பாடங்கள்:முதல்வா் (JUNE 19) தொடக்கி வைக்கிறாா்..!!

எனவே, குறைந்தபட்சம் மாவட்டங்களுக்குள் பஸ்கள் இயக்க வாய்ப்புள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் JUNE 19 காலை 11:00 மணிக்கு, மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகும்.

Leave a Comment