உள்ளாட்சி தேர்தல் எப்போது..?? - ஆளுநர் உரையில் தகவல்..!! - Tamil Crowd (Health Care)

உள்ளாட்சி தேர்தல் எப்போது..?? – ஆளுநர் உரையில் தகவல்..!!

 உள்ளாட்சி தேர்தல் எப்போது..?? – ஆளுநர் உரையில் தகவல்..!!

CORONA  பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர், உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சிக் கொள்கை மீது அரசு உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தன்னாட்சி கொள்கை அடிப்படையில், மாநிலத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அரசு புத்துயிர் அளிக்கும் என கூறினார்.

இந்த செய்தியும் படிங்க…

21-06-2021 LAST DATE- JOBS: ஒரு நாளைக்கு ரூ.5,000/- ஊதியத்தில் CDAC நிறுவனத்தில் வேலை..!!

தொடர்ந்து பேசிய அவர், 2016ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை எனக் கூறினார். அத்துடன் முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை தாண்டி வரைவு அனைத்து வகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்பும், CORONA பெருந்தொற்று குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Comment