உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா அசத்தல் – ஹாட்ரிக் சாதனை..!!

 உலக கோப்பை வில்வித்தையில் இந்தியா அசத்தல் – ஹாட்ரிக் சாதனை..!!

உலக கோப்பை வில்வித்தை 3ம் நிலை தொடரின் கலப்பு குழு ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் – தீபிகா குமாரி ஜோடி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. தம்பதியரான இவர்கள் இருவரும் இணைந்து, இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் வான் டெர் பெர்க் – கேப்ரியலா ஷ்லோசர் ஜோடியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தனர்.

இந்த செய்தியையும் படிங்க… 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி(2021)க்கு- தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்..!! 

 மகளிர் ரீகர்வ் குழு பிரிவிலும் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் 5-1 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டனர். முன்னதாக, ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இந்திய அணி இதுவரை 3 தங்கம் வென்றிருந்த நிலையில், தீபிகா தனிநபர் பிரிவிலும் மேலும் ஒரு தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

Leave a Comment