உருமாறிய 'XE' கொரோனா- மிக வேகமாக பரவும் - WHO எச்சரிக்கை..!! - Tamil Crowd (Health Care)

உருமாறிய ‘XE’ கொரோனா- மிக வேகமாக பரவும் – WHO எச்சரிக்கை..!!

 உருமாறிய ‘XE’ கொரோனா- மிக வேகமாக பரவும் –


 WHO எச்சரிக்கை..!!

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிய உருமாறிய கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா வைரஸ் தாக்கியது.

கொரோனா வேக்சின் பணிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை காரணமாகவை வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. இதனால் உலகின் பல நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.

கொரோனா வைரஸ்:

கொரோனா வைரசை இதுவரை எந்தவொரு நாடும் முழுமையாக அழிக்கவில்லை. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதே அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அதன் பின்னர் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக வேக்சின் தடுப்பாற்றாலும் புதிய உருமாறிய கொரோனாவுக்கு எதிராக குறைந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

ஓமிக்ரான்:

 கடைசி அலையை ஏற்படுத்திய ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும், தீவிர பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பு XE என்ற புதிய வகை கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒமிக்ரான் BA.2 வகையை விட சுமார் பத்து சதவீதம் வேகமாகப் பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு வரை, ஓமிக்ரான் BA.2 கொரோனா தான் மிக வேகமாகப் பரவும் கொரோனா வகையாக இருந்தது.

புதிய XE உருமாறிய கொரோனா:

இந்த புதிய XE உருமாறிய கொரோனா என்பது BA.1 மற்றும் BA.2 ஆகிய இரண்டு உருமாறிய கொரோனாவின் ஹைபிரிட் வேரியண்ட் ஆகும்.  இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, “XE உருமாறிய கொரோனா (BA.1-BA.2), கடந்த ஜனவரி 19இல் இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இதுவரை 600 பேருக்கு மட்டுமே இந்த புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வேகமாக பரவும்:

மேலும். இந்தப் புதிய கொரோனா 10 சதவிகிதம் வரை வேகமாகப் பரவும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.. XE வேரியண்ட்டின் தீவிரத் தன்மை பெரியளவில் மாறுபாடு இல்லை என்றும் இப்போது இதுவரை இதை ஓமிக்ரான் கொரோனாவின் ஒரு வகை பிறழ்வு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது,

உருமாறிய கொரோனா:

சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா உலகெங்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. 

ஆல்பா கொரோனா:

அதன் பின்னர், பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா உலகெங்கும் பரவியது. 

 டெல்டா கொரோனா:

அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்பட்டது. 

ஓமிக்ரான்:

கடைசியாகத் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் நாட்டில் 3ஆவது அலையை ஏற்படுத்தியது.

Leave a Comment