உடல் எடையை குறைக்க குடிநீர் மட்டும் போதுமா..??

 உடல் எடையை குறைக்க குடிநீர்  மட்டும் போதுமா..??

உடல் எடையை குறைக்க  தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே போதுமானது. ஏனெனில் உடல் நீரேற்றத்துடன் இருப்பது நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் அதனால் இன்னும் பிற நன்மைகளையும் பெறலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

குடிநீர் எவ்வாறு உடல் எடையை குறைக்கும் : 

பல ஆராய்ச்சிகள் குடிநீருக்கு பல நன்மைகள் இருப்பதாகவும், அவற்றில் எடை இழப்பு முக்கியமானது என்றும் குறிப்பிடுகின்றன. ஒபெசிட்டி இதழில் 2011ல் வெளியான ஒரு ஆய்வில், ஒரு ஹைபோகலோரிக் டயட்டின் போது குடிநீர் வயதானவர்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமனைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக உடல் எடையைக் குறைப்பது கடினம் என்றாலும் இந்த முறை பாசிட்டிவான ரிசல்ட்டுகளை தருகின்றது.

இந்த செய்தியையும் படிங்க…

அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கை, அறிகுறிகள் என்ன..?? 

2017ம் ஆண்டில் இன்டர்நேஷனல் ஒபெசிட்டி இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், 12 மாத எடை பராமரிப்பு காலத்திற்கு டயட் ட்ரிங்ஸ் மற்றும் பீவரேஜ்களை சாதாரண நீருக்கு மாற்றிய பங்கேற்பாளர்கள் உடல் எடையை குறைத்தது மட்டுமல்லாமல், இன்சுலின் சென்சிட்டிவிட்டி மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் மேம்படுத்தியிருப்பதைக் குறிக்கிறது. உடல் எடையை குறைக்க குடிநீர் நிச்சயம் உதவும்.

ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்கிறது :

 பல நேரங்களில் மக்கள் தாகமாக இருப்பார்கள். ஆனால் நம் மூளை அந்த தாகத்தை பசி என்று நினைத்துக் கொண்டு நம்மை சாப்பிட தூண்டும். அந்த நேரத்தில் நம் கைகளும் உணவை நோக்கி செல்லும். அப்போது அதிகமான உணவை நாம் உட்கொள்கிறோம். பசிக்காத போது நாம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும். பசிக்கும் தாகத்திற்குமான வித்தியாசத்தை பல நேரங்களில் நம் மூளை கணிக்கத் தவறி விடும். இந்த நேரங்களில் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்தால், இந்த கலப்பு சிக்னல்களை சமாளித்துவிடலாம். தண்ணீர் குடிப்பது இது இயற்கையாகவே உங்கள் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்கிறது.

உடற்பயிற்சி திறனை மேம்படுத்துகிறது :

 நீரானது, தசையின் செயல்பாட்டிற்கு ஒருங்கிணைந்ததாகும். எனவே போதுமான அளவு நீரை குடிப்பதால் தசைகள், இணைப்பு திசுக்கள் மற்றும் மூட்டுகள் நன்றாக வேலை செய்ய உதவும். தண்ணீர், தசைப்பிடிப்பு மற்றும் சோர்வுவைக் குறைக்க உதவுகிறது. இவை அனைத்தும் உடற்பயிற்சி செய்வதற்கான உங்கள் திறனை மேம்படுத்துகின்றன. இது நிலையான எடை இழப்புக்கு மிகவும் அவசியம்.

நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கும் :

 குறிப்பாக உணவுக்கு 10-15 நிமிடங்களுக்கு முன், தண்ணீரை குடித்தீர்கள் என்றால் அது வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். மேலும் நீண்ட நேரம் உங்களுக்கு பசிக்காமல் வைத்திருக்கும். இது அதிகப்படியான பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் உங்கள் தேவையற்ற எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது.

கலோரி எரிப்பை அதிகரிக்கிறது : 

அதிக எடை கொண்ட பெரும்பாலான மக்கள் கலோரிகளை வேகமாக எரிக்க சிரமப்படுகிறார்கள். நீங்கள் ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும்போது கூட போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கலோரிகளை எரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், குடிநீர் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை வேகமாக எரிக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறது. தண்ணீரை அதிகமாக குடிப்பது உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. பெரியவர்கள் தண்ணீர் குடித்த 15 நிமிடங்களுக்குள் அவர்களது கலோரி 25-35 சதவீதம் குறைகிறது. இது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.

இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது : 

உங்கள் உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காதபோது, உங்கள் உடலில் நச்சுகள் குவியும். மற்ற டிடாக்ஸ் பானங்களுக்குப் பதிலாக தண்ணீரை குடிப்பது இந்த நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. போதுமான தண்ணீரை குடிக்காமல் இருந்தால் உடலில் நச்சுக்கள் தங்கிவிடுகிறது.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ? :

உங்கள் வயது, உடல் அளவு, செயல்பாட்டு நிலைகள், சுகாதார நிலை, வளிமண்டல வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியின் அளவு ஆகியவற்றால் உங்கள் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை ஆராய்ச்சி காட்டுகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

 இதயத்தைப் பாதுகாக்கும்-சாக்லேட்: ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை..!!

வெப்பமண்டல காலநிலையில் வாழும் மக்கள், அதிக வியர்வை, உழைப்பு அல்லது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொரு நாளும் மற்றவர்களை விட அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும். வயதானவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் தங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்தபின் தண்ணீரை குடிக்க வேண்டும்.

பொதுவாக, பெரியவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரே பாட்டிலைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும், தண்ணீரிங் குடித்து வந்தால் உங்கள் நீர் உட்கொள்ளலை எளிதாக அளவிட முடியும். 1 லிட்டர் தண்ணீரை குடிப்பதால், உடலில் உள்ள கலோரிகள், தண்ணீர் குடித்ததில் இருந்து 60 நிமிடங்கள் வரை எரிக்கப்படுகின்றன.

Leave a Comment