உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற -சூப்பர் பானம்.!!
பொதுவாக ஒவ்வொரு பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள விதைகள் பலவிதமான மருத்துவ குணங்களை கொண்டது.
அதில் சியா(CHIA) விதைகளும் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!
உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் இந்த சியா (CHIA) விதை செய்து வருகின்றது. அதிலும் இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற எளியமுறையில் உதவி புரிகின்றது.
அந்தவகையில் இதை எப்படி எந்த தயாரிப்பது? இதன் நன்மைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சியா விதைகள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
புதினா இலைகள் – 5
தேன் – 1 தேக்கரண்டி ( இனிப்புச் சுவை தேவையெனில்)
தண்ணீர் – 1 கப்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் சியா விதைகளை எடுத்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின் இதனுடன் புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
அனைத்து பொருட்களும் சரியாக கலந்துள்ள நிலையில் அது ஜெல் போன்ற நிலையில் இருக்கும். இனி, இது குடிப்பதற்கு தயார்.
டிடாக்ஸ் பானத்தை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
- சியா விதைகள் டிடாக்ஸ் பானத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், இது செரிமானத்தை துரிதப்படுத்தி, குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
- சியா விதைகள், நமது உடலில் இன்சுலின் சென்சிட்டி விட்டியை சீராக்கி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
- சியா விதைகளில், OMEGA- 3 கொழுப்பு அமிலங்களின் ஒரு வகையான ஆல்பா – லினோலெனிக் அமிலம் அதிகளவில் உள்ளது. இது கார்டியோ – வாஸ்குலார் மண்டலம் சிறந்து இயங்க உதவுகிறது.
- சியா விதைகளில் உள்ள CALCIUM , மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- சியா விதைகள் டிடாக்ஸ் பானத்தில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால், உடல் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இனிய வரப்பிரசாதமாக இது விளங்குகிறது.
இந்த செய்தியும் படிங்க…
“DO NOT SKIP YOUR BREAKFAST – காலை உணவை தவிர்க்காதீர்கள்”..!!