உடலில் ஆக்சிஜன் அளவு – குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!!

உடலில் ஆக்சிஜன் அளவு- குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!!

Corona தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம்.

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

Corona நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன்பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. Corona  சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 ஜலதோஷம், இருமலை நீக்க – மூலிகை டீ தயாரிப்பது எப்படி..??  

Coronavirus  தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. அப்படி ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும்.  தக்க சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம். உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

சுவாசிப்பதில் சிரமம்: 

Corona தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம். எனினும் சுவாசிப்பதற்கு சிரமம், மூச்சுத்திணறல்(Wheezing) போன்ற பாதிப்புகளை சிலர் உணரக்கூடும். உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவரால் இயல்பாக செயல்பட முடியாது. சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

 உதடுகள் நிற மாற்றம் : 

உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். ஆக்சிஜன் இல்லாதவர்கள், நாளங்களுக்குள் அதிக அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட ஹீமோகுளோபின் கொண்டிருப்பவர்களுக்கு நீல நிறத்தில் உதடுகள் காட்சியளிக்கலாம்.

ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகள்:

ஆக்ஸிஜன் நிறைந்த உணவுகளில் எலுமிச்சையில் ஆக்ஸிஜன் அதிகம். எலுமிச்சை அமிலத்தன்மை கொண்டது. ஆனால் உட்கொள்ளும்போது காரமாக மாறும். எலுமிச்சை மின்னாற்பகுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது ஒரு சிறந்த கார உணவாகிறது. இது இருமல், சளி, காய்ச்சல், ஹைபராக்சிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் பிற வியாதிகளையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும், உங்கள் உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு காரணமான கல்லீரலை சுத்தப்படுத்தும் திறன் எலுமிச்சைக்கு உள்ளது.

 இந்த செய்தியும் படிங்க…

தலை வலியை குணமாக்கும் – வெந்நீர் வைத்தியம்..!! 

ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க உதவும் உணவுகளில் அவகேடோ நம்பமுடியாத சத்தான மற்றும் மிகவும் ஆரோக்கியமான உணவாகும். அவகேடோ, வாழைப்பழங்கள், கேரட், செலரி, பூண்டு மற்றும் பேரீட்சை அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன

Leave a Comment