உடம்பில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க-பின்பற்ற வேண்டிய 4 விதிகள்..!! - Tamil Crowd (Health Care)

உடம்பில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க-பின்பற்ற வேண்டிய 4 விதிகள்..!!

உடம்பில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க-பின்பற்ற வேண்டிய 4 விதிகள்..!!

சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நான்கு விதிமுறைகளை பின்பற்றினாலே போதும் 

1) சரியானதைச் சாப்பிடுங்கள், அதனுடன் உடற்பயிற்சியையும் செய்யுங்கள்:

சர்க்கரை நோய் என்றாலே உணவில் கட்டுப்பாடும் வந்துவிடும். என்ன உணவு சாப்பிட்டால் நல்லது என்பது பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு சர்க்கரை நோயாளிக்கும் நன்றாகவே உள்ளது. அதே நேரத்தில் உணவு எடுப்பதில் எவ்வளவு நேர இடைவெளி என்பதை கவனிக்க மறந்துவிடுகின்றனர். 

ஒரு உணவு வேளைக்கும் அடுத்த உணவு வேளைக்கும் இடையே இரண்டரை முதல் மூன்று மணி நேரத்துக்கு இடைவெளி மிகாத வகையில் கவனம் தேவை. உணவை பிரித்துச் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஒரே நேரத்தில் அதிக அளவில் சர்க்கரை அளவு அதிகரிப்பது தவிர்க்கப்படும். அதே போல் உடற்பயிற்சியும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் அவசியம்.

2) கொலஸ்டிரால் அளவைக் கட்டுக்குள் வைத்திடுங்கள்:

சர்க்கரை அளவு அதிகரிப்பது ரத்தத்தில் நல்ல கொழுப்பு அளவைக் குறைத்துவிடும். மேலும் டிரைகிளசரைட் மற்றும் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அளவை அது அதிகரிக்கச் செய்யும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்க, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

3) சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்:

சர்க்கரை நோயாளிகளுக்கு சில சமயம் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக சென்றுவிடும். சில நேரத்தில் மிகக் குறைவாக சென்றுவிடும். இது தெரியாமல் அதிக உணவு எடுப்பது அல்லது அதீத உடற்பயிற்சி செய்வது என்று நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். இதனுடன் மூன்று மாதத்துக்கு ஒரு முறை எச்.பி.ஏ.1.சி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

4) மருந்துகளைத் தவிர்க்க வேண்டாம்:

உணவு, உடற்பயிற்சிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துவிட்டு நமக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்திருக்கும் என்று சுய முடிவுக்கு வந்து மாத்திரை மருந்தை எடுப்பதை நிறுத்திவிட வேண்டாம். மாத்திரைகளை எடுக்க மறப்பது அல்லது தவிர்ப்பது சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, சர்க்கரை அளவு அதிகரிப்பால் ஏற்படக்கூடிய வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்திடலாம்.

Leave a Comment