இன்னும் சற்றுநேரத்தில்- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்..!!
இன்னும் சற்றுநேரத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
வரும் சனி, ஞாயிறு- 2 நாட்களும் முழு ஊரடங்கா..??
கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது. இரண்டாவது அலை தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் முழு பொது முடக்கம் வருமா? அல்லது வேறு சில கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படுமா? என்ற அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிரிபார்க்கப்படுகிறது.