இந்தியாவில் 12 மாநிலங்களில் பரவியுள்ள DELTA PLUS வைரஸ்..!!

 இந்தியாவில் 12 மாநிலங்களில் பரவியுள்ள DELTA PLUS வைரஸ்..!!

இந்தியாவில் 12 மாநிலங்களில் 51 பேருக்கு DELTA PLUS கொரோனாவைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகநோய்கட்டுப்பாட்டுக்கானதேசியமையம்தெரிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: PLUS TWO வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்..!! 

 இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் இந்நிலையில், டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் பரவ தொடங்கியிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் இதுவரை இந்த 12 மாநிலங்களில் 51 பேருக்கு கொரோனா டெல்டா பிளஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது .

 மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக டெல்டா பிளஸ் கண்டறிப்பட்டுள்ளது . 

மகாராஷ்டிராவில்- 22 பேருக்கு 

தமிழ்நாட்டில் -9

 மத்தியப் பிரதேசத்தில் -3

கேரளாவில்-3

 கர்நாடகா-1 

ஆந்திரா-1

 ஒடிசா-1

பஞ்சாப்-1

 ஹரியானா-1

 குஜராத்-1

 ராஜஸ்தான்-1 

 ஜம்மு -காஷ்மீர்-1

 டெல்டா ப்ளஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய டெல்டா பிளஸ் வகைக்கு எதிராகத் தடுப்பூசிகள் எந்த அளவிற்குச் செயல்படுகின்றன என்று ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். முடிவுகளை 10 நாட்களுக்குள் எதிர்பார்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

RNA வகையான இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே இருந்தால், அது உருமாற்றம் பெற்றுக் கொண்டேதான் இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!! 

அதனால் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, கை கழுவுதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment