இதை செய்யாவிட்டால்- குழந்தையின் ஆதார்(AADHAAR) செயலிழந்துவிடும்..??

 இதை செய்யாவிட்டால்- குழந்தையின் ஆதார்(AADHAAR) செயலிழந்துவிடும்..??

ஆதார்(AADHAAR) என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கும் தற்போது ஆதார் அவசியமாகும். குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களே எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால் சில இடங்களில் 9 மாதங்களுக்கு மேல் ஆனால் மட்டுமே ஆதார் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்கு ஆதார்(AADHAAR) எடுக்க முதலில் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.htmlஎன்ற ஆதார் இணைய பக்கத்திற்கு சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தில்

 குழந்தையின் பெயர், 

தந்தை அல்லது தாய் மொபைல் எண் ,

மின்னஞ்சல் முகவரி 

போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கான ஆவணங்களை கொடுத்து ஆதார் மையத்திற்கு சென்று ஆதார் எடுத்துக் கொள்ளலாம். குழந்தையின் 5 வயதுக்குப் பிறகு கைரேகை அப்டேட் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யாவிட்டால் ஆதார் செயலிழந்துவிடும்.

Leave a Comment