இதய நோய்(Heart attack): இதயம் செயலிழக்க போகிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகள்..!!
இந்த செய்தியும் படிங்க…
தவறான உணவு பழக்கம், சரியில்லாத வாழ்க்கை முறை போன்றவைகள் தான் இதய நோய்கள் வருவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
ஒருவரின் இதயம் செயலிழக்க போகிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்க முடியும்.
இதய செயலிழப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள்:
- தரையில் மல்லாந்து படுக்கும்போது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுவது, கை கால்களில் குறிப்பாக மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டிருப்பது, காலை அல்லது மாலை வேளைகளில் வீடு அல்லது அலுவலகங்களில் சிறிது தொலைவு நடந்தாலும் மூச்சு விட சிரமப்படுவது போன்றவை முக்கிய அறிகுகள் ஆகும்.
- அதே போல இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, திடீர் திடீரென்று இதயத் துடிப்பு அதிகரிப்பது இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், உங்களது இதயம் செயலிழந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
- இதய செயலிழப்பு என்பது இதயம், அதனுடைய இயக்கத்தை மெதுவாக குறைத்துக் கொள்வதாகும்.
- இதற்கு உடனடியாக சிகிச்சை பெறவில்லையென்றால், நாளடைவில் இதயம் தன்னுடைய இயக்கத்தை முழுமையாக நிறுத்திவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியும் படிங்க…