ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம்
செய்வது எப்படி..??
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வது எப்படி பின்வருமாறு:
1. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும்
https://www.nvsp.in.Forms/form8?lang=en-GB
2.உங்கள் மாநிலம்,மாவட்டம், சட்டமன்றத் தொகுதியை தேர்ந்தெடுங்கள்.
3. உங்கள் பெயர், வாக்காளர் பட்டியலின் பாகம் எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை உள்ளிட்டவும்.
4.பெயர், புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவு முறை, பாலினம் இதில் எங்கு மாற்றம் செய்ய வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுங்கள்.
5.நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றின் பெயர் ,ஊர், அஞ்சலகம், பின்கோடு, மாவட்டம், வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவு முறை, ஆகியவற்றை சரியான பதிலை உள்ளீடுகள்.
6.நீங்கள் தேர்ந்தெடுத்தவற்றின் சரியான விபரத்தை மட்டுமே உள்ளிட முடியும். ஒரே நேரத்தில் மூன்று பகுதிகளை மட்டுமே சரி செய்ய முடியும் .
7.நீங்கள் தேர்ந்தெடுத்த பகுதிக்கான சரியான விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து JPG file-லாக 2MB க்குள் சேவ் செய்ய வேண்டும்.இதை உரிய இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
8. விருப்பத்தின் பேரில் இ-மெயில் முகவரி(E-mail Address), மொபைல் எண்ணை(Mobile Number) உள்ளிடலாம். விருப்பமில்லையெனில் உள்ளிடத் தேவையில்லை.
9. அடுத்து இடம், கேப்சாவை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
10.உடன் தோன்றும் ஒப்புகை இரசீது பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.