ஆந்திராவில்: இனி பட்டப்படிப்புகள் -ஆங்கில வழியில் மட்டுமே..!!

 ஆந்திராவில்: இனி பட்டப்படிப்புகள் -ஆங்கில வழியில் மட்டுமே..!!

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கல்வித் துறைஅமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அமராவதியில் நேற்று நடைபெற்றது.

இந்தச் செய்தியையும் படிங்க…

பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: அமைச்சர் ..!!  

இதில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது இண்டர்மீடியட் படிப்புக்கு பின்னர், பட்டப்படிப்புகள் அனைத்தும் ஆங்கில வழியில் மட்டுமே கற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கான உத்தரவும் நேற்றே வழங்கப்பட்டது.

இது நடப்பு 2021-22 கல்விஆண்டு முதலே அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம்65,981 மாணவ, மாணவியர் பாதிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் இண்டர்மீடியட்டில் தெலுங்கு மொழி கல்வி திட்டம் மூலம் பயின்றவர்களாவர். இவர்கள் தொடர்ந்து தெலுங்கு மொழி வாயிலாகவே பட்டப்படிப்பையும் தொடர வேண்டுமென விண்ணப்பித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 1,200 அரசுமற்றும் தனியார் பட்டப்படிப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் 2021-22 கல்வி ஆண்டில் சுமார் 2 லட்சம் பேர் ஆன்லைன் மூலம்பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

 இந்தச் செய்தியையும் படிங்க…

 மாதம் ரூ.10,333 சம்பளத்தில். BEL- நிறுவனத்தில் வேலை..!!  

இதில் 65,981 பேர் தெலுங்கு வழிக் கல்வியில் பயில விண்ணப்பித்துள்ளனர். தற்போதையபுதிய திட்டத்தால் 65,981 பேரின் நிலை கேள்விக்குறியாகிஉள்ளது.

Leave a Comment