அரசு ஊழியர்கள் 100 % பணிக்கு வரவேண்டும்: புதுச்சேரி அரசு..!!
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 100 % பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் CORONA பரவல் அதிகரித்தால், அரசு அலுவலகங்களில் Group B, மற்றும் Group C ஊழியர்கள் 50% மட்டுமே சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என புதுச்சேரி அரசு கடந்த April மாதம் 21ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்தச் செய்தியையும் படிங்க…
மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!
இந்நிலையில் தற்போது Corona பரவல் குறைந்துள்ளதையடுத்து, அரசு அலுவலகங்களில் GROUP B மற்றும் GROUP C ஊழியர்கள் நாளை முதல் அனைத்து CORONA பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி 100 % பணி செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.