அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்..!!

 அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்..!!

அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் வேண்டுகோள்

அரசு ஊழியர்களின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப்பணியாளர் ஒய்வு வயதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால், ஒய்வு பெறும் வயதில் இருப்பவர்கள் நெருக்கடியில் உள்ளனர். அரசுப் பணியாளரின் ஒய்வு வயது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழக அரசு எடுக்கும் கொள்கை முடிவுக்கு ஆதரவு:

ஒய்வு வயது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் கொள்கை முடிவுக்கு ஆதரவு, ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்களுக்கு முழுப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியம் திட்டத்தை அறிவிக்க வேண்டும்:

  1. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதியம் திட்டத்தை அறிவிக்க வேண்டும். 
  2. அரசுத் துறைகளில் தற்காலிகப் பணியாளர்களை பணி வரன்முறை செய்து நிரந்தரப்படுத்த வேண்டும். 
  3. அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment