அதிர்ச்சி.! 30 லட்சம் IT ஊழியர்கள் வேலை இழப்பார்கள்..!!

 அதிர்ச்சி.! 30 லட்சம்  IT ஊழியர்கள் வேலை இழப்பார்கள்..!!

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 30 லட்சம் IT ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

IT-யில் தானியங்கு தொழில்நுட்பம் அதிகரித்து வரும் சூழலில் வேலைக்கு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே 1.60 கோடி பேர் பணியாற்றும் IT துறையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 30 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியும் படிங்க…

ரத்த அழுத்தத்தை விரட்ட – .ஒரு சில இயற்கை பொருட்கள்..!! 

இந்தியாவில் பணியாற்றும் 1.60 கோடி IT  ஊழியர்களில் 90 லட்சம் பேர் சிறிய நிறுவனங்களிலும், BBO-க்களிலும் பணியாற்றி வருகின்றனர். அந்த 90 லட்சம் பேரில் 30 சதவீதம் பேர் அல்லது 30 லட்சம் பேரை வேலையில் இருந்து IT நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்கு தானியங்கு தொழில்நுட்பமே காரணமாக கூறப்படுகிறது. TCS, INFOSIS, WIPRO, HCL, TEX MAHINDRA  மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் 30 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரோபோ செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஆட்களின் தேவை குறைந்து வருகிறது. எனவே 30 லட்சம் பேரை நீக்கிவிட்டு 7 லட்சம் தானியங்கு தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.

இந்த தாக்கத்தால் அமெரிக்காவில் 10 லட்சம் வேலை இழப்பார்கள் என்று பாங்க் ஆப் அமெரிக்காவின் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 25,000 அமெரிக்க டாலர் செலவாகிறது. அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 50,000 அமெரிக்க டாலர் செலவாகிறது.

எனவே, 30 லட்சம் பேரை பணி நீக்கம் செய்தால் கணிசமான அளவு பணம் மிச்சம் செய்யலாம் என்று நிறுவனங்கள் கருதுகின்றன. ஏற்கனவே CORONA  தொற்றால் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க வைக்கும் நிறுவனங்கள் அலுவலகம் இல்லாமல் பல கோடி ரூபாய் பணத்தை மிச்சம் பிடிக்கின்றன என்பது அறிந்த விஷயம்.

இந்த செய்தியும் படிங்க…

கொரோனா(CORONA)-வின் முக்கிய அறிகுறிகள் மாறிவிட்டது-பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை..!! 

ரோபோ செயல்முறை தானியங்கு செயல் என்பது மென்பொருள் தானே தவிர ரோபோ வேலை பார்க்கும் என்று அர்த்தம் அல்ல. இது சாதாரண மென்பொருளில் இருந்து வேறுபடுகிறது. இதன் மூலம் வேலை நேரமும், செலவும் குறையும் என மென்பொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment