“அதிமுகவில் இருந்து ஓ.பன்னீசெல்வம் விரைவில் தூக்கி எறியப்படுவார்” – புகழேந்தி..!!

 “அதிமுகவில் இருந்து ஓ.பன்னீசெல்வம் விரைவில் தூக்கி எறியப்படுவார்” – புகழேந்தி..!!

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டது விரைவில் ஓ பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார் என அ.தி.மு.க வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.

அ.தி.மு.க வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் அதில் அவர் அதிமுகவில் நான் 20 ஆண்டு காலம் போராடி உழைத்திருக்கிறேன் ஜெயலலிதாவின் மதிப்பிற்கும், அவரது அன்பிற்கும் உரியவன் நான். இந்த புகழேந்தி என்பவன் தற்பொழுது சர்வாதிகாரியான எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டு விட்டேன். 

இந்தச் செய்தியையும் படிங்க… 

எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS, கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு..!!  

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளில் கூட வெல்வதற்கு அருகதையில்லை எங்களால் தான் அதிமுக 47 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது எங்களால் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு கட்சியை விமர்சனம் செய்ததற்காக கட்சியை விட்டு நீக்குகிறார்கள் எடப்பாடி பழனிசாமி எவ்வளவு கொடூரமான மனிதர் என்பதை தற்பொழுது நிறுபனம் செய்துவிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு அருகதை இல்லாதவர் பியூன் வேலைக்கு கூட லாயக்கு இல்லை என்று பேசியதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா என அன்புமணி ராமதாஸ் பேசியதை சுட்டிக்காட்டியுள்ளார். இப்படிப் பேசிய மனிதரை அவரது குற்றச்சாட்டிற்கு பதில் சொன்னதற்காக தற்பொழுது நான் பழிவாங்கப் பட்டிருக்கிறேன் கட்சி எந்த நிலைமைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அனைத்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் புரிந்துகொள்ளவேண்டும். சசிகலா காலில் விழுந்த முதல்வர் என்று நாடே கைகொட்டி சிரிக்கும் நேரத்தில் தற்பொழுது அடுத்த தவறைச் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் கட்சியில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது அதை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் வரும் இனி எடப்பாடி பழனிச்சாமி தப்பிக்கவே முடியாது என்ற நிலை விரைவில் வரப்போகிறது. இது அனைத்தும் அவருக்கு போகப் போக புரியும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து நான் தற்பொழுது பேச விரும்பவில்லை.

 சர்வாதிகாரியான எடப்பாடிபழனிசாமி எடுக்கும் முடிவுக்கு எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் தற்போது கட்டுப்படும் நிலைமைக்கு வந்து விட்டார் கட்சி முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரின் கைக்குள் சென்றுவிட்டது. மேலும் கட்சிக்குள் உங்களை நீக்கச் சொல்லி என்னை கட்டாயபடுத்தி கையெழுத்து போட வைத்து விட்டார்கள் என்னை மன்னித்து விடுங்கள் புகழேந்தி என அவரிடம் பன்னீர்செல்வம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியையும் படிங்க… 

தங்க நகைகளுக்கு இன்று (JUNE 15)முதல் ஹால்மார்க் கட்டாயம்..!!  

அதிமுக என்னும் கட்சியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது 100% கட்சியின் பொறுப்புகளிலிருந்து விரைவில் அவர் நீக்கப்படுவார் அதற்கான சதி நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள அமைச்சர் ஒருவர் இதற்கான வேலைகளை செய்து வருவதாக தெரிவித்து அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

Leave a Comment