அதிக வட்டி, அதிக வருமானம்- தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்..!!

 அதிக வட்டி, அதிக வருமானம்- தேசிய சேமிப்பு சான்றிதழ்

 திட்டம்..!!

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் வட்டி விவரம்:

தபால் துறையில் பல்வேறு முதலீடு திட்டங்கள் உள்ளது. அதில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த அளவுக்கு இந்த திட்டத்தில் என்ன சிறப்பு இருக்கிறது என்பதை இதில் பார்ப்போம்.

வங்கியில் பிக்சட் டெபாசிட்களுக்கு கிடைக்கும் வட்டியை விட இந்த சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி அதிகம். தற்போது தேசிய சேமிப்புச் சான்றிதழ் இத்திட்டத்தில் 6.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள், அதன் பின்பு தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து கொள்ள முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்து உங்கள் கணக்கை தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு கிடையாது.

இது மட்டுமல்ல இந்த திட்டத்தில் முதலீடு செய்பவருக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகின்றது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மொத்தமாக 15 லட்சம் முதலீடு செய்தீர்கள் என்றால், ஆண்டுக்கு 6.8 சதவீதம் என கணக்கிட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு சுமார் 20.85 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் வட்டி வருமானம் மூலம் சுமார் 6 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் சேர விரும்பினால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று சேரலாம்.

Leave a Comment