அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும்: தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும், அங்கு பயின்று வரும் மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என தொடக்கப்பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தொடக்கப்பள்ளிகள் நடத்த அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தொடக்கப்பள்ளிகள் இனி செயல்பட கூடாது.
இந்த செய்தியையும் படிங்க…
14.06.2021 பள்ளிகளில் ஆசிரியர்கள் என்ன பணிகள் செய்ய வேண்டும் – CEO Proceedings..!!
அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் மாவட்டத்தில் செயல்படுமாயின் அதற்கு அந்தந்த வட்டார, மாவட்ட கல்வி அலுவலர்கள் தான் முழு பொறுப்பு. அரசு விதிமுறையை நடைமுறைப்படுத்த மறந்த கல்வி அலுவலர்கள் மீண்டும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.